விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை நோட்டமிடும் இந்தியா: தனியார் நிறுவனத்தின் அதிரடி சாதனை  

Estimated read time 1 min read

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை (Non-Earth Imaging – NEI) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது.
பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையில், அசிஸ்டா நிறுவனத்தின் 80 கிலோ எடை கொண்ட ‘AFR’ செயற்கைக்கோள், சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) மிகத் துல்லியமாகப் புகைப்படம் எடுத்துள்ளது.
இது விண்வெளியில் உள்ள மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் அல்லது ‘நோட்டமிடும்’ (In-orbit snooping) இந்தியாவின் திறனை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

You May Also Like

More From Author