தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு அக்டோபர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவருமான வாங் ஹுநீங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் வெற்றி பெற்றதும் தைவான் மீட்டெடுக்கப்பட்டதும், முழு தேயசித்திற்கான பெரிய வெற்றியாக திகழ்கின்றன. சீன மக்களுக்கும் சீன தேசியத்துக்கும் மாபெரும் பெருமை. கட்சியும் அரசும் தைவான் மீட்கப்பட்டதன் நினைவு தினத்தை நிறுவுவது, ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்பதிலும் நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதிலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இன மக்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டியது என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டுபற்றை மையாக கொண்ட தேசிய எழுச்சியை வெளிகொண்ர்வது, தைவான் நீரிணையின் இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்றுவது முதலிய வரலாற்று ரீதியான கடமைகளை இரு கரை உடன்பிறப்புகளும் கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
