ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்தனர்.

அதோடு, NDA கூட்டணியின் தலைவராகவும் அவரை ஒருமனதாக தேர்வு செய்வதாக அவர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில், வரும் ஜூன் 9 அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் மோடி, ஜூன் 8 பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாற்று தேதி பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில். இந்திய அரசின் “அண்டை நாடுகளுக்கு முதலில்” கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், தெற்காசிய நாடுளின் முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author