ஜனவரி 1ம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த வால்வோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ கார் இந்தியா அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதன்படி அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வாகனங்களின் விலையையும் 2 சதவீதம் வரை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வால்வோ கார் இந்தியாவின் எம்.டி., ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், சந்தை நிலவரங்கள், அந்நியச் செலாவணி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உதிரி பாகங்களின் அதிக சுமை போன்ற காரணங்களால் இந்த விலையை உயர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறினார்.