வாகைபதி அய்யா கோவில் தேரோட்டம்

Estimated read time 1 min read

வாகைக்குளம் வாகைபதி அய்யா ஶ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் தைப்பெருந்திருவிழா தேரோட்டம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தை பெருந்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதமும் , ஆவணி மாதமும் 11- நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தைப் பெருந்திருவிழா திருவிழா தொடங்கியது.

நாள்தோறும் அனுமன், கருடன், நாக வாகனம், வெள்ளை குதிரை வாகனம், இந்திர வாகனம் போன்ற வாகனங்களில் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி
அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் வழங்கி, அருள் வாக்கு கொடுத்து வந்தார்.
ஒவ்வொரு திருவிழா அன்றும் இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழாவின் நிறைவு நாளான இன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

அய்யா வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .

தேரின் முன்பு மேளதாளம்,செண்டை மேளம் முழங்க , சிறுமிகள் கோலாட்டம் அடித்து ஆடி பாடி வந்தனர்,

தேர் திருவிழாவில் அய்யா சிவ சிவ அரகரா,அய்யா உண்டு என்னும் கோஷங்களை முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

You May Also Like

More From Author