ஐ.நா பாதுகாப்பவை பிப்ரவரி 20ஆம் தேதி ஐ.நா பாதுகாப்பவை இருக்கைகளின் சமமான பகிர்வு மற்றும் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பிரச்சினை பற்றியும், ஐ.நா பாதுகாப்பவையின் வேறு விவகாரங்கள் பற்றியும் அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் ஐ.நா.விலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஆக்கிரமிப்பு வரலாற்றை சுயசோதனை செய்து கொள்ள ஜப்பான் மறுக்கிறது. 2ஆவது உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்குகளை ஜப்பான் வெளிப்படையாக காலால் மிதித்து, வேறு நாட்டின் இறையாண்மையில் தலையிட்டு, பிராந்திய அமைதி மற்றும் நிதானத்திற்கு புதிய அச்சுறுதல்களை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய நாடுகளுக்கு ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக விண்ணப்பிக்கும் தகுநிலை இல்லை என்றார்.
