ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி, இல்லையெனில் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் என்ற கிளி பறந்துவிடும் என உசிலம்பட்டி சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி பேசியிருப்பது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி குறித்து கேலி செய்யும் வகையில் பேசும் திருச்சி சிவா போன்றோரை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.