திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Estimated read time 1 min read

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதில் 11 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்களை களமிறங்குகிறது திமுக. அதை தவிர திமுகவின் சீனியர் வேட்பாளர்கள் பலரும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்; மத்திய சென்னை- தயாநிதி மாறன்; ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு; வேலூர்- கதிர் ஆனந்த்; நீலகிரி (தனி)- ஆ.ராசா; தேனி- தங்க தமிழ்செவன் மற்றும் தூத்துக்குடி- கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author