தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்  

Estimated read time 0 min read

தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அவருடன் தவெகவைச் சார்ந்த 9 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னதாக, 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெறாத நிலை இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெற்று ஆட்சியமைத்துள்ளார்.

You May Also Like

More From Author