சீன வணிக அமைச்சகம் ஆகஸ்டு 22ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவில் இணைய வழி சில்லறை விற்பனையின் மொத்த தொகை 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் உண்மையான பொருட்களின் விற்பனை தொகை 6.3 விழுக்காடு அதிகமாகும். எண்ணியல் பொருட்கள், பழைய–புதிய விற்பனைக் கொள்கை ஆகியவை, அதிகரிப்புக்கான இயக்காற்றலாக மாறியுள்ளன.
பெருந்தரவுகளின்படி, கணினிகள், நுண்ணறிவார்ந்த அணிதல் பொருட்கள், கைப்பேசிகள் ஆகியவற்றின் இணைய வழி விற்பனை தொகை முறையே 29.9, 28.4 மற்றும் 20.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், சேவை நுகர்வு உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. சுற்றுலா, உணவு, பொழுதுப்போக்கு ஆகியவற்றின் இணைய வழி விற்பனை தொகை முறையே 24.8, 16.6 மற்றும் 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.