சீனா-கம்போடியா-தாய்லாந்து அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை ஜூலை 30ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் சுன் வெய்தோங், கம்போடியா மற்றும் தாய்லாந்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதில் போர் நிறுத்தம் பற்றிய ஒத்த கருத்துகளைப் பின்பற்ற கம்போடியா மற்றும் தாய்லாந்து மீண்டும் வலியுறுத்தின. பிரதேச நிலைமையை அமைதிப்படுத்துவதில் சீனா ஆற்றிய முக்கிய பங்குகளை இவ்விரு நாடுகள் பாராட்டின. வெளிப்படையான, நட்பார்ந்த, இணக்கமான சூழலில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இவ்விரு நாடுகளின் எல்லை சர்ச்சையை அமைதியாக தீர்ப்பதில் சீனா தொடர்ச்சியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பங்காற்றி வருகிறது. இம்மூன்று தரப்புப் பேச்சுவார்த்தை, சீனாவின் புதிய தூதாண்மை முயற்சிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.