ஐபிஎல் 2026: ஈடன் கார்டனில் லக்னோவின் த்ரில் வெற்றி; வெற்றிக்கணக்கைத் தொடங்காத கேகேஆர்  

Estimated read time 0 min read

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 15வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ, 16 ஓவர்கள் முடிவில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஆனால், களத்தில் இருந்த இளம் வீரர் முகுல் சௌத்ரி யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி காட்டி, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து லக்னோவிற்கு ஒரு மறக்க முடியாத வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன் மூலம் கேகேஆர் 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் நீடிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author