மாணவர்கள் கவனத்திற்கு! 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது? வெளியானது முழு கால அட்டவணை!

Estimated read time 1 min read

1 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலில், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. இதில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தேர்வு ஆரம்பித்து 16ஆம் தேதி முடிவடைகிறது.

4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் மொழி தேர்வு. 7ஆம் தேதி விருப்பமொழி பாடத்தேர்வு. 8ஆம் தேதி ஆங்கிலம், 9ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி அறிவியல், 16ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வாகும்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ் தேர்வும், 9ஆம் தேதி விருப்பமொழி பாடத்தேர்வும், 13ஆம் தேதி ஆங்கில தேர்வும், 16ஆம் தேதி கணிதப்பாட தேர்வும் நடக்க இருக்கிறது.

6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி ஆரம்பிக்கும் இந்த தேர்வு 13ஆம் தேதி ஏப்ரல் முடிவடைகிறது. 6 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு முற்பகலிலும், 7 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.

ஏப்ரல் 1ஆம் தேதி தமிழ் பாடத்தேர்வு, 6ஆம் தேதி விருப்பமொழி பாடத்தேர்வும், 7ஆம் தேதி ஆங்கில பாடத்தேர்வும், 8ஆம் தேதி உடற் கல்வியியல் தேர்வும், 9ஆம் தேதி கணிதத்தேர்வும், 13ஆம் தேதி அறிவியல் தேர்வும், 16ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது.

You May Also Like

More From Author