தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
இதற்கான விழா நாளை மாலை 3:00 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை நடைபெறும் விழாவில் முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் இந்த லேப்டாப்கள் வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்
