பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா?  

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 22ம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மாற்று திறனாளிகள், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 25ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

செப்டம்பர் 11ஆம் தேதியுடன் பொறியியல் படிப்பு கலந்தாய்வு முழுவதும் நிறைவு பெறும்.

You May Also Like

More From Author