அண்ணாமலையார் மலைக்கு மகா தீப ஆராதனை நிகழ்வு!

Estimated read time 0 min read

திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஆரத்தி சங்கமம் விழா நடைபெற்றது.

சமயம் சார்ந்த கருத்தரங்கம், பவளக்கொடி கும்மியாட்டம் மற்றும் மகா மலை ஆரத்தி சங்கமம் விழா ஆகியவை நடைபெற்றன.

இந்நிகழ்வில் இந்திய அளவில் உள்ள பல சன்னியாசிகள் பங்கேற்று அண்ணாமலையார் மலைக்கு மகா தீப ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் அடங்கிய பவளக்கொடி கும்மியாட்டம் குழுவினர், பக்திப் பாடல்களுக்கு கும்மியாட்டம் ஆடினர். அம்மன் வேடம் அணிந்த பெண் ஒருவர், அம்மன் பாடல்களுக்கு பக்தி நடனமாடினார்.

You May Also Like

More From Author