வள்ளியூர்:டிச. 17 நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற பழவூர் அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத பஜனை சிவனடியார்களால்தொடங்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு திருக்கோயிலிருந்து ஆரம்பித்து மாடவீதி ரதவீதிகளின் வழியாக தேவாரம், திருவாசகம் , பல்வேறு பதிகங்கள், பாடல்கள் பாடி சிவனடியார்கள், பெண்கள் ஊர்வலமாக திருக்கோயில் வந்து சேர்ந்தனர்.
சிவதொண்டர்களையும்,பெண்களையும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் பழவூர் இசக்கியப்பன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
தொடர்ந்து அருள்மிகு பெரும் பொதி விநாயகர், அருள்மிகு நாறும்பூநாதர், அருள்மிகு ஆனந்த நடராஜர், அருள்தரும் ஆவுடையம்மாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் ஈஸ்வர சுப்பிரமணியசுவாமிபட்டர் நடத்தினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
