வியட்நாம் நாட்டின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான சம்பவத்தால் தான் சொல்லொணாத் துயரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்திய அதிகாரிகள் வியட்நாம் அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக உறுதி அளித்துள்ளார்.
வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த அதிவேகப் படகு: 15 இந்தியப் பயணிகள் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்
