பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் இஸ்ரேல் பயணம்: என்ன அஜெண்டா?  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்படுகிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒன்பது ஆண்டுகளில் இது அவரது இரண்டாவது இஸ்ரேல் பயணமாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ‘மூலோபாய கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் இந்த பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இன்று இஸ்ரேல் சென்றடையும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றமான கினெசெட்டில் உரையாற்றுகிறார்.
இந்த பெருமையை பெறும் முதல் இந்திய பிரதமர் இவரே ஆவார்.
தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

You May Also Like

More From Author