ஓமன் வளைகுடா கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மற்றொரு வணிகக் கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சனிக்கிழமை (ஜூன் 13) காலையில் வெளியான தகவல்களை மத்திய அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணிக்கும் எம்டி லியாகி ஃப்ரீடம் என்ற எண்ணெய் மற்றும் இரசாயனக் கப்பல், வெள்ளிக்கிழமை இரவு முதல் ரேடியோ அலைவரிசைத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதால் அது தாக்கப்பட்டிருக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலும் செய்திகள் பரவின.
இதனால் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவிய சூழலில், ஓமன் அருகே மற்றொரு இந்தியக் கப்பல் தாக்கப்பட்டது என்ற செய்தி முற்றிலும் தவறானது என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஓமன் அருகே மற்றொரு இந்தியக் கப்பல் மீது தாக்குதலா? மத்திய அரசு விளக்கம்
