இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட் மூலம் NVS-02 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100 வது ராக்கெட் என்ற பெருமையைப் பெற்றது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு, செயற்கைக்கோள் வெற்றிகரமாக நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இருப்பினும், அங்கிருந்து அதன் புவிவட்டப் பாதையை உயர்த்தி வட்டப்பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த செயற்கைக்கோள் திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல் போனது.
இஸ்ரோவின் NVS-02 செயற்கைக்கோள் தோல்வி: விரிவான காரணங்களை வெளியிட்டது இஸ்ரோ!
