உலகப் பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பிரபல தொழிலதிபர் பீட்டர் டயமண்டிஸ் எழுப்பியிருந்த விவாதத்திற்குப் பதிலளித்த எலான் மஸ்க், இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் மனித இனத்தின் ஒட்டுமொத்த கூட்டு அறிவையும் ஏஐ தொழில்நுட்பம் முழுமையாக மிஞ்சிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
