கல்கி-2 திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி:உறுதி செய்த தயாரிப்பு தரப்பு  

Estimated read time 1 min read

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதலாம் பாகத்தில் ‘சுமதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தீபிகா படுகோன் நீக்கப்பட்டதால் அந்த கதாபாத்திரம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அவருக்குப் பதில் நடிகை சாய் பல்லவி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என நியூஸ்18 செய்தி தெரிவிக்கிறது.
“தீபிகா வெளியேறிய பிறகு அந்தத் தூணான கதாபாத்திரத்தைத் தவிர்க்க முடியாது. எனவே, அதற்குப் பொருத்தமான சாய் பல்லவியை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்,” என்று படக்குழுவினர் உறுதிப்படுத்தியதாக அந்த செய்தி கூறியது.

You May Also Like

More From Author