திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (நவ.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் அறங்காவலர் குழு யார்?, அதில் எத்தனை பேர் உள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேவஸ்தான அதிகாரிகளின் கருத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் மாவட்ட ஆட்சியருக்கு இல்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவை ஆட்சியர் வேண்டுமென்றே நிறைவேற்றவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் “கார்த்திகை தினம் 11 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதே தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அரசியல் காரணங்களால்தான் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது.
#Live || தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை என்பதால் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு
#ThiruparankundramIssue | #Court | #Case | #PolimerNews
https://t.co/GHQxCjB4UF— Polimer News (@polimernews) November 27, 2026
