பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்  

Estimated read time 1 min read

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.
பிப்ரவரி 26 அன்று இரவு தொடங்கிய இந்த மோதலில் இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக கூறி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, தலிபான் படைகள் எல்லையெங்கும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தின.
இதில் பாகிஸ்தானின் 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 ராணுவத் தளங்கள் மற்றும் 19 சோதனை சாவடிகளை கைப்பற்றியதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
மேலும், சில பாகிஸ்தான் வீரர்களை உயிருடன் சிறைபிடித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.e

You May Also Like

More From Author