கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு அக்.31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே அறிவித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா; சாப்டர் 1 திரைப்படம், இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.
வெறும் 16 கோடி ரூபாய் செலவில் தயாரான இப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து , அப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மேலும் அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி வெளியான காந்தாரா; சாப்டர் 1 படம், தனது முதல் பாகத்தின் சாதனையை முறியடித்து தற்போது வரை உலகம் முழுவதும் 717.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் தற்பொழுது ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளது. வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் ஆங்கிலத்தில் திரைக்கு வர உள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.
