ஈரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்: தெஹ்ரானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு  

Estimated read time 0 min read

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மீது ஒரு தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் இந்த அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

You May Also Like

More From Author