அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி (NRG) மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 தகுதிச் சுற்று ஆட்டத்தில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
சுமார் 68,777 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், பலத்த போராட்டத்திற்கு பிறகு பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் கம்பேக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் முதல் பாதியில் பின்தங்கியிருந்த போதிலும், இரண்டாவது பாதியில் மீண்டெழுந்து பிரேசில் அணி வெற்றி பெறுவது கடந்த 88 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
FIFA 2026: ஜப்பானை வீழ்த்தி பிரேசில் த்ரில் வெற்றி
