வடகொரியா அதிரடி: ஒரே நேரத்தில் 10 ஏவுகணைகளை வீசி சோதனை  

Estimated read time 1 min read

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து, வடகொரியா இன்று (மார்ச் 14) ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது.
இது அந்தப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தும் ‘ஃப்ரீடம் ஷீல்டு’ என்ற கூட்டு ராணுவப் பயிற்சியே இந்த ஏவுகணை சோதனையைத் தூண்டியுள்ளது.
இந்தப் பயிற்சிகள் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என்று வடகொரியா கருதுகிறது.
முன்னதாக, கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், இந்தப் பயிற்சியால் “கற்பனை செய்ய முடியாத பயங்கரமான விளைவுகள் ஏற்படும்” என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author