ரயில் டிக்கெட் இருந்தும் சீட் பறிபோக வாய்ப்பு! ‘நோ ஷோ’ விதி என்ன?  

Estimated read time 1 min read

இந்திய ரயில்வேயின் விதிமுறைகளின்படி, ஒரு பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் நிலையத்திலிருந்து இரயிலில் ஏறவில்லை என்றால், அந்த இருக்கையை காலியாக இருப்பதாக டிடிஇ (TTE) கருத வாய்ப்புள்ளது.
நீங்கள் ஏற வேண்டிய நிலையத்திலிருந்து அடுத்த இரண்டு நிலையங்கள் கடக்கும் வரை நீங்கள் இருக்கையில் இல்லை என்றால், உங்களை ‘நோ ஷோ’ (No Show) என்று டிடிஇ கணக்கிடுவார்.
அதன் பிறகு, அந்த இருக்கையை காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) இருக்கும் மற்ற பயணிகளுக்கு ஒதுக்க அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஒருமுறை உங்கள் இருக்கை வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டால், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உங்களிடம் இருந்தாலும் அந்த இருக்கையைத் திரும்பப் பெற முடியாது.

You May Also Like

More From Author