அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
சிவசாகர் மாவட்டத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்த நிலையில், நிலைமையை கையாள அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ₹9 லட்சமாக உயர்த்த அசாம் அரசு முடிவு செய்துள்ளது.
வழக்கமாக வழங்கப்படும் ₹4 லட்சத்துடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து (CMRF) கூடுதலாக ₹5 லட்சம் சேர்த்து மொத்தம் ₹9 லட்சம் வழங்கப்படும்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 மாதத்திற்கு மேலாக உடல்கள் மீட்கப்படாதவர்களின் குடும்பங்களுக்கும் இதே அளவு நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அசாம் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 75 ஆக உயர்வு
