மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை மோதல்கள் நடந்தன.
ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களும் அவர்களது போட்டியாளர்களும் போலீசாருடன் மோதியதால், டாக்கா உட்பட பல பகுதிகளில் அமைதியின்மை வெடித்தது.
நெடுஞ்சாலைகளை மறித்து தலைநகர் வழியாக அணிவகுத்து சென்ற போராட்டக்காரர்களை கலைக்க அதிகாரிகள் தடியடி, ஒலி கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வன்முறையில் இரண்டு பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு
