பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

Estimated read time 1 min read

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான நிதிச்சுமை காரணமாக, அந்நாட்டின் தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், மேற்காசிய போர் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசலுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிதிச்சுமையை எதிர்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author