ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புநிறுவப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்
அக்டோபர் 16ஆம் நாள் இவ்வமைப்புக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறுகையில், உலக
உணவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு முறைமையின்
மாற்றத்தை முன்னேற்றுதல், பல்வேறு நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துத்தல் ஆகியவற்றில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முக்கிய
பங்காற்றி வருகின்றது என்று தெரிவித்தார்.
மேலும், உணவு பாதுகாப்பில் மிகுந்த கவனம்
செலுத்தி வரும் சீன அரசு, 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொதைக்கான உணவுத்
தேவைப் பிரச்சினையைச் சொந்தமாகவே தீர்ப்பதோடு, தேவைப்படும்
நாடுகளுக்கும் இயன்றளவில் உதவி அளித்து வருகின்றது என்றும், ஐ.நா.வின் உணவு
மற்றும் வேளாண்மை அமைப்பு சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை துறையில் முக்கியமான
பங்காற்றி வருவதை சீனா எப்போதும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றது என்றும் அவர்
தெரிவித்தார்.