சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் சீன இராணுவ விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மார்ச் 18ஆம் நாள் பதிலளித்தார்.
2026ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு செலவுத் திட்டம் பற்றி சீனா விவரங்களை வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக 1.5 விழுக்காட்டுக்குட்பட்ட சீனாவின் தேசிய பாதுகாப்பு செலவு, அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளை விட மிகவும் குறைவு. இந்த செலவின் அதிகரிப்பானது, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்கும், உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
ஜப்பான் தனது இராணுவ உபகரணங்கள் மற்றும் பலத்தை அதிகரிப்பதற்கு சாக்குபோக்கைத் தேடும் வகையில், அந்நாட்டின் அரசியல்வாதிகள் சீனாவின் தேசிய பாதுகாப்பு செலவுத் திட்டத்தை மிகைப்படுத்தி, சீனாவின் அச்சுறுத்தலை புனைந்துள்ளனர். ஜப்பானின் ஆக்கிரமிப்பு வரலாறு காரணமாக, ஆயுதங்களை முற்றிலும் களைக்க வேண்டிய ஜப்பான், தன்னை மீண்டும் ஆயுதப்படுத்தும் எந்த தொழிலையும் நடத்தக் கூடாது என கெய்ரோ அறிக்கை உள்ளிட்ட பல ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜப்பானின் பாதுகாப்பு செலவு திட்டம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக அதிகரித்து வருவதோடு, அதன் நபர்வாரி பாதுகாப்பு செலவு சீனாவை விட 3 மடங்கிற்கு மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதியான அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முயலும் ஜப்பான், தற்காப்பின் வரம்புக்கு மீறிய தாக்குதல் ஆயுதங்களை உருவாக்கி நிலைநிறுத்தியுள்ளது. மீண்டும் இராணுவமயமாக்கலைத் தேடும் ஜப்பான் பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உண்மையான அச்சுறுத்தல் என்று ஜியாங் பின் தெரிவித்தார்.
