சீன ஊடகக் குழுமம் மற்றும் ஜெர்மனியின் டசல்டார்ஃபு நகரிலுள்ள சீனாவின் துணைத் தூதரகம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, மார்ச் 17ஆம் நாள் டசல்டார்ஃபில் நடைபெற்றது.
இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங் காணொளியின் மூலம் உரைநிகழ்த்தினார். ஜெர்மனியின் அரசியல், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
ஷென் ஹாய்சியோங் கூறுகையில், உயர்மட்டத் திறப்பை விரிவுபடுத்தி, உலகளாவிய சந்தைகளை விரிவாக்கி, சர்வதேச சுழற்சியுடன் சிறப்பாக இணைய வேண்டும் என்று இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்களில் சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இவ்விரு கூட்டத்தொடர்களில், 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 4.5 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கும் இலக்கு முன்மொழியப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த தொடர்பு, தொழில்நுட்பப் புத்தாக்கம், ஊடக வளங்கள் ஆகிய துறைகளில் தனது உலகின் முதல்தர நன்மைகளைப் பயன்படுத்தி, சீன பாணியுடைய நவீனமயமாக்கலின் சாதனைகளை உலகிற்கு பயனளிக்கவும், சீனாவின் உயர்தர வளர்ச்சியின் புதிய வாய்ப்புகளை உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், சீன ஊடக குழுமம் விரும்புகிறது என்றும் ஷென் ஹாய்சியோங் தெரிவித்தார்.
