சீனாவில் எதிர்காலம் காணும்:வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்த கருத்துகள்

சீன சந்தையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமல்ல, இச்சந்தை நம்பகத்தக்கது. மேலும்,  வாக்குறுதிகளை இது கண்டிப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

எனவே, எதிர்காலம் சீனாவில் தான் உள்ளது என்று நான் கருதுவதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த 6ஆவது ச்சிங்டாவோ பன்னாட்டு நிறுவனங்கள் தலைவர்கள் மாநாட்டில், இத்தாலிய என்னி குழுமத்தைச் சேர்ந்த சீன பிரிவுக்கான தலைமை இயக்குநர் ஜியோவானி செய்தியாளர்களுகடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சீன சந்தை முக்கிய நெடுநோக்கு வாய்ந்த சந்தை எனவும், உலகிலேயே மிகப்பெரிய சந்தை எனவும், சீன சந்தை ஈடிணையற்ற சந்தை எனவும், உணர்ச்சி மிக்க சந்தை போன்ற சொற்களை பயன்படுத்தி, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல வெளிநாட்டு தலைமை நிர்வாக அதிகாரிகள் கருத்துகளை தெரிவித்தனர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டு, சீனாவின் முதலாவது தேசிய நிலை பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கையான இந்த மாநாட்டில்,  உலகின் 6 கண்டங்களில் இருந்து 465 பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 570 விருந்தினர்கள் கலந்துகொண்டு, வரலாற்றில் முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது. இம்மாநாட்டில் மொத்தம் 40 முக்கிய திட்டங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 593 கோடி டாலர்களை எட்டியன.

 

வெளிநாட்டு நிதி முதலீட்டு ஒத்துழைப்பு கருத்தரங்கு, முதியோர் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கு, பொது விமானம் மற்றும் குறைந்த உயரத்தில் வான்வழி பொருளாதாரத்தின் வளர்ச்சி கருத்தரங்கு உள்ளிட்டவை இதில் இடம்பெற்று, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு மேடை வினியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author