11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க டிஜிசிஏ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் பயணம் பெரும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட 11 நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்குமாறு அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இந்த ஆலோசனையானது வரும் மார்ச் 28, 2026 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author