பிரதமர் நரேந்திர மோடியும், பிஜியின் பிரதமர் சித்திவேனி லிகாமமாடா ரபுகாவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.
பிஜி பிரதமர் ரபுகாவின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். சந்திப்பின் முடிவில் ஏழு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
பிஜியின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்.
சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விவகாரங்களில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா – பிஜி உறுதி
