ரஷியாவில் வசந்தகாலத்தில் சீனா என்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி

Estimated read time 1 min read

சீன ஊடகக் குழுமம் மற்றும் ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சீன கலாசார மையம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, மார்ச் 19ஆம் நாள் மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங் காணொளியின் மூலம் உரைநிகழ்த்தினார். சீனா மற்றும் ரஷியாவின் அரசியல், கல்வி, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 200 பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

ஷென் ஹாய்சியோங் கூறுகையில், சிஜிடிஎன் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றில், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு வழிகாட்டியுள்ள சீனாவின் உயர்தர பொருளாதார வளர்ச்சி எனும் கருத்து, தற்போதைய கொந்தளிப்பான உலகில் மேலும் மதிப்புமிக்க நிலைத்தன்மையையும் நேர்மறை ஆற்றலையும் வழங்கியுள்ளதாக 80க்கும் மேற்பட்ட விழுக்காட்டினர் பாராட்டினார் என்றார். உயர்மட்டத் திறப்பை விரிவுபடுத்தி, உலகளாவிய சந்தைகளை விரிவாக்கி, சர்வதேச சுழற்சியுடன் சிறப்பாக இணைய வேண்டும் என்று இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்களில் சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் வலியுறுத்தியதாக தெரிவித்தார். சீன பாணியுடைய நவீனமயமாக்கலின் சாதனைகளை உலகிற்கு பயனளிக்கவும், சொந்த தனிச்சிறப்பு கொண்டு கூட்டாக வளரும் மனித நாகரிக ஓவியத்தை உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் இணைந்து வரையவும், சீன ஊடக குழுமம் விரும்புகிறது என்றும் ஷென் ஹாய்சியோங் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author