வளர்ச்சிக்கான உலகின் ஒருங்கிணைப்பு உச்சி மாநாடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சரும் சாங் கோச்சிங் 11ஆம் நாள், அழைப்பின் பேரில், காணொளி வழியாக, வளர்ச்சிக்கான உலகின் ஒருங்கிணைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இதில் அவர் கூறுகையில், சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய 4 உலகளாவிய நிர்வாக முன்மொழிவுகள், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்றார். மேலும், வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா உறுதியாகத் தொடர்ந்து விரிவாக்கி, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்டு, உலகப் பொருளாதாரத்திற்கு மேலும் நிதானத்தையும் உறுதிப்பாட்டையும் வழங்க பாடுபடும் என்றும் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியது. ஜெர்மனி மற்றும் கனடியத் தலைமையமைச்சர்கள், அமெரிக்கா, பிரேசில், இந்தியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் உயர் நிலைப் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனம் மற்றும் சர்வதேச நாணய நிதியப் பொறுப்பாளர்கள் முதலியோர் இதில் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author