உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மாநிலத்தில் உள்ள அனைத்து வீட்டுக்கும் அரசு வேலை வழங்குவதாக நம்ப முடியாத வாக்குறுதியை ஆர்ஜேடி வழங்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும், ஓபிசி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது ராகுல் காந்தி அல்ல, பிரதமர் மோடிதான் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
