சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், யுனெஸ்கோவின் பொது இயக்குநர் ஆட்ரி அசோலேவுடன் செப்டம்பர் 28ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-யுனஸ்கோ ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது துணைப் புரியும். யுனெஸ்கோவுடன் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு திறன் மற்றும் நிலையை உயர்த்தி, பல்வகை நாகரிகங்களின் பரிமாற்றம் மற்றும் பகிர்வை முன்னேற்றி, உலக அமைதியை ஆதரித்து, மனிதகுல பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தைத் தூண்ட சீனா விரும்புகிறது என்றார்.
ஆட்ரி அசோலே கூறுகையில், யுனெஸ்கோவின் பணிகளுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து, ஆக்கமுடன் ஆதரவளித்து வருகிறது. சீனாவுடன் இணைந்து, பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு, அறிவியல், பண்பாடு, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலதிக சர்வதேச ஒத்த கருத்துகளை உருவாக்கி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்காற்ற யுனெஸ்கோ விரும்புகிறது என்றார்.