வன பரப்பளவு மற்றும் வன இருப்பு அளவு 40 ஆண்டுகளாக அதிகரித்து வரும் சீனா

Estimated read time 0 min read

மார்ச் 21ஆம் நாள் சர்வதேச வன தினமாகும். தற்போது சீனாவின் வன பரப்பளவு 59.5 கோடி ஏக்கரை எட்டி, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் வனப் பரப்பின் விகிதம் 25.09 சதவீதமாக உள்ளது.

வன இருப்பு அளவு 2 ஆயிரத்து 98 கோடி 80 லட்சம் கன மீட்டரை எட்டியுள்ளது.  வன பரப்பளவு மற்றும் வன இருப்பு அளவு 40 ஆண்டுகளாக அதிகரித்து வருவதோடு, உலகில் மிகப்பெரிய அளவிலும் விரைவாகவும் பசுமையாகி வரும் நாடாக சீனா மாறியுள்ளது என்று சீனத் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி பணியகம் 20ஆம் நாள் தெரிவித்தது.

இவ்வாண்டின் சர்வதேச வன தினத்தின் கருப்பொருள் வனம் மற்றும் பொருளாதாரம் என்பதாகும். கடந்த ஆண்டுகளில் வனம் மற்றும் புல்வெளி தொழிலின் சீரான வளர்ச்சியை சீனா ஊக்குவித்து வருகிறது.

வன உணவுகளின் ஆண்டு உற்பத்தி அளவு 24 கோடி டன்னைத் தாண்டியுள்ளது. சூழலியல் சுற்றுலாவுக்கான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 300 கோடியை எட்டியதோடு, கிட்டத்தட்ட 3 லட்சம் புதிய வணிக நிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author