காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

Estimated read time 0 min read

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடபெறுவது வழக்கம்.

ஆனால் திருப்பணிகள் நடைபெற்றதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருக்கல்யாணம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது பங்குனி உத்திர விழாவுக்கான திருக்கொடி, கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியையும், அம்பாளையும் பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author