5வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்

5வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழாவின் துவக்க நிகழ்வு மற்றும் திரைப்பட இசை நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் நாள் ஹாய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது.


சீன ஊடகக் குழுமம் மற்றும் ஹாய்நான் மாநில அரசின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறுகின்ற நடப்பு திரைப்பட விழாவில், துவக்க நிகழ்வு, திரைப்பட போட்டி, கருத்தரங்கு, கார்னிவல், நிறைவு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4018 திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 திரைப்படங்களுக்கு இவ்விழாவுக்கான விருது பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

You May Also Like

More From Author