திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

Estimated read time 0 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளக்கப்பட்டுள்ளதால், திருப்பதி திருமலை ஏழுமலையான் கூட்டம் அலைமோதுகிறது. இதன்காரணமாக இலவச தரிசனத்திற்கு24 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேர ஒதுக்கீடு செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகத்தையும் தற்காலிகமாக நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author