லத்தின் அமெரிக்க-கரீபியன் நாடுகளின் பொது சமூகத்தின் 10ஆவது உச்சி மாநாடு, மார்ச் 21ஆம் நாள், நடப்பு தலைமை நாடான கொலம்பியாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில்,
லத்தின் அமெரிக்க-கரீபியன் நாடுகளின் பொது சமூகம், நிறுவிய பிறகு, தெற்குலக ஒத்துழைப்புக்கும் கூட்டு வளர்ச்சிக்கும் புதிய ஆற்றலை ஊட்டியுள்ளது. கடந்த மே திங்களில், சீன-லத்தின் அமெரிக்க-கரீபியன் நாடுகளின் பொது சமூக கருத்தரங்கின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
ஒற்றுமை, வளர்ச்சி, நாகரிகம், அமைதி, பொது மக்கள் இணைப்பு ஆகிய 5 திட்டப்பணிகளை இருதரப்பும் கூட்டாக நடத்த துவங்கியது என்று இதன் துவக்க விழாவில் அறிவித்தேன். லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் நண்பராகவும் கூட்டாளியாகவும் உள்ள சீனா, லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுடன் இணைந்து, சர்வதேச நீதியைப் பேணிக்காத்து, இரு தரப்பின் புதிய அத்தியாயத்தைத் திறக்க விரும்புகின்றது என்றார்.
