இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் புதிய தொழில்களின் வளர்ச்சி

Estimated read time 0 min read

சீனச் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் புதிய தொழில்கள் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. நாடளவில் முக்கியமான 8 புதிய தொழில்கள் மற்றும் 9 எதிர்காலத் தொழில்கள் தொடர்பாக 5 இலட்சத்து 61 ஆயிரம் நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இவற்றில் மனித உருவ ரோபோ தொழில் தொடர்பாக ஒரு இலட்சத்து 16 ஆயிரம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட இவ்வெண்ணிக்கை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், இக்காலத்தில் உயர் தொழில் நுட்பச் சேவை துறை வேகமாக வளர்ந்து வருகின்றது. தகவல் பரிமாற்றம், மென்ரக தொழில் நுட்பச் சேவை ஆகிய துறைகளில் 3 இலட்சத்து 22 ஆயிரம் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. கடந்த ஆண்டை விட இது 3.3 சதவீதம் அதிகமாகும்.

சாதனத் தயாரிப்புத் துறைகளின் தரம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது. இத்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author