பசுமை மாற்றத் துறையில் சீனாவின் பங்கு பாராட்டப்படத்தக்கது:ஐ.நா அதிகாரி

Estimated read time 0 min read

பசுமை மாற்றத் துறையில் சீன அரசு மேற்கொண்டு வரும் சிறந்த தலைமைத் திறனையும் நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளையும் காலநிலை மாற்றம் பற்றிய ஐ.நா கட்டுக்கோப்பு உடன்படிக்கையின் செயலகத்தின் நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல் பாராட்டியுள்ளார். இது குறித்து அண்மையில் சி.ஜி.டி.என்னுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,

சூறாவளி, வறட்சி, வெள்ளம், உயர் வெப்பம் ஆகியவை பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் பாதித்துள்ளன என்று தெரிவித்தார். காலநிலை மாற்றம், குடியேற்றப் பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா உலகச் சமூகத்துக்குப் பயன்படக் கூடிய அனுப்பவங்களை வழங்கியதோடும், உலக பசுமைச் சந்தையின் செழுமையை விரைவுபடுத்தி, புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது. இது பல நாடுகளின் வளர்ச்சிக்கு உண்மையான நலன்களை தர முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author